நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறும் போது தீக்குளித்த நபரால் பரபரப்பு!

Prime minister Fire Nepal
By Shankar Jan 24, 2023 05:59 PM GMT
Report

நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து புஷ்ப கமல் தஹால் (Pushpa Kamal Dahal) என்கிற பிரசந்தா வெளியேறி காரில் செல்லும்போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தாவின் தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறும் போது தீக்குளித்த நபரால் பரபரப்பு! | Person Set Fire Pm Exit From The Parliament Napel

முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பிரசந்தா தலைமையில் ஆட்சி அமைந்தது.

இதன்படி, நேபாளத்தின் பிரதமராக 3-வது முறையாக பிரசந்தா பதவியேற்றார். அவருக்கு அதிபர் பித்யாதேவி பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறும் போது தீக்குளித்த நபரால் பரபரப்பு! | Person Set Fire Pm Exit From The Parliament Napel

நேபாள நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 19-ம் திகதி நடைபெற்றது.

இதில், சி.பி.என்-யூ.எம்.எல். கட்சியின் வேட்பாளரான தேவ் ராஜ் கிமிரே, 167 ஆதரவு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில், நேபாள நாட்டு நாடாளுமன்றத்தில் இருந்து இன்று மதியம் பிரதமர் பிரசந்தா வெளியேறி காரில் ஏறி சென்றார்.

நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறும் போது தீக்குளித்த நபரால் பரபரப்பு! | Person Set Fire Pm Exit From The Parliament Napel

அவர் செல்லும்போது நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் டீசலை எடுத்து, திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நபர் இல்லம் மாவட்ட பகுதியை சேர்ந்த பிரேம் பிரசாத் ஆச்சாரியா (வயது 37) என தெரியவந்தது. அவரை கீர்த்திப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சிகளை நபர் ஒருவர் காணொளியாக படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US