எனது பிள்ளையை பற்றி கூறிய நபரை அடையாளம் காட்ட போகின்றேன்; மீண்டும் சர்சையைக் கிளப்பிய மேகன்
பிரித்தானிய அரச குடும்பத்தில் தான் இருந்தவேளை, தன் பிள்ளை கறுப்பாக பிறக்கப் போகிறதாக நக்கலடித்த நபரை தான் அடையாளம் காட்டப் போவதாக மேகன் மார்கன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் யாரை பார்த்து கை காட்டப் போகிறார் என்பது தெரியவில்லை. எனினும் அது நிச்சயம் அரச குடும்ப அங்கத்தவர்களில் ஒருவராக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இல்லையேல் மூத்த அதிகாரிகளாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிரபல்யமான TV நிகழ்ச்சி தொகுப்பாளி ஓப்ராவின் அடுத்த நிகழ்சியில் தான் இந்தக் குண்டை தூக்கிப் போட இருக்கிறார் மேகான்.
ஓப்பிராவுக்கு தனது நிகழ்ச்சியின் டி.ஆ.பி ரேட் உயரவேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். மெகானுக்கோ தனக்கு பணம் வரவேண்டும் புகழ் வரவேண்டும் என எதிர்பார்கிறார்.
இதற்கு பிரித்தானிய அரச குடும்பம் தான் கிடைத்துள்ளது இவர்களுக்கு என பலரும் விசனங்களை தெரிவித்துள்ளனர்.