பெருவின் முன்னாள் ஜனாதிபதி பியுஜிமோரி காலமானார்
பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்ட்டோ பியுஜிமோரி (Alberto Fujimori) (86) காலமானார் .
1990 முதல் 2000 ம் ஆண்டுவரை பெருவின் ஜனாதிபதியாக பதவி வகித்த பியுஜிமோரி (Alberto Fujimori) ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவியை இராஜினாமா செய்தார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இடது சாரி கெரில்லாக்களிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த பியுஜிமோரிக்கு (Alberto Fujimori) எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நாட்டிலிருந்து தப்பியோடிய பியுஜிமோரி (Alberto Fujimori) பின்னர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . அதன் பின்னர் பியுஜிமோரி சிறைதண்டனையை அனுபவித்தார்.
25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 வருட சிறைவாழ்க்கையின் பின்னர் பியுஜிமோரி (Alberto Fujimori) கடந்த வருடம் விடுதலைசெய்யப்பட்டார்.
இந்நிலையில் பியுஜிமோரி (Alberto Fujimori) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார் என அவரது மகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.