மத்திய கிழக்கு மோதல் ; முடங்கும் பிலிப்பைன்ஸ் வானூர்தி சேவைகள்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உலகளாவிய வானூர்தி எரிபொருள் (Jet Fuel) தட்டுப்பாட்டினால் பிலிப்பைன்ஸின் வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த நாட்டு ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Jr) தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் ஏற்கனவே பிலிப்பைன்ஸ் வானூர்திகளுக்கு எரிபொருள் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளன.

இதனால் வானூர்திகள் தமக்குத் தேவையான எரிபொருளைப் புறப்படும் இடத்திலிருந்தே ஏற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
குறுகிய தூரப் பயணங்களை விட, அதிக எரிபொருள் தேவைப்படும் நீண்டதூர (Long haul) சர்வதேச வானூர்தி சேவைகளுக்கே இந்த நெருக்கடி பெரும் சவாலாக அமையும் என அந்த நாட்டு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.