புச்சாவில் மனித உடல்களின் குவியல்கள்; பகிரங்க அழைப்பு விடுத்த ரஷ்ய கோடீஸ்வரர்
ரஷ்ய - உக்ரைன் போரில், ரஷ்யாவால் கைவிடப்பட்ட பகுதியான புச்சாவில் மனித படுகொலைகள் இடம்பெற்றதாக, ரஷ்யா மீது மேற்குலகு நாடுகள் குற்றம் சுமத்துவது தொடர்பிலான விரிவான விசாரணைக்கு ரஷ்ய கோடீஸ்வரர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய அலுமினிய கம்பெனியான “Rusal” இன் தலைவரான Oleg deripaska இந்த அழைப்பை அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் பல மேற்கத்திய அரசாங்கங்கள் மாஸ்கோ போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டியுள்ளன.
எனினும், கிரெம்ளின் அதற்கு பொறுப்பாளியாக மறுப்பதுடன், மேற்கத்திய குற்றச்சாட்டுகள் ரஷ்யப் படைகள் மீதான ஒரு கொடூரமான மோசடி என்றும் அறிவித்தது.
இந்த நிலையில், இந்த குற்றம் பற்றிய ஒரு புறநிலை மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றும் , குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை அழைக்கிறோம், என்றும் Oleg deripaska தெரிவித்தார்.
நாங்கள் எல்லோரும் இந்த மோதலுக்கு ஒரு முடிவை விரும்புகிறோம், இது உயிர்களை, குடும்பங்களை மற்றும் முழு நகரங்களையும் அழிக்கிறதாகவும் அவர் கூறினார்.
எனவே அத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு பொருத்தமான தண்டனையை நாம் விரும்புகிறோம் என்றும் Oleg deripaska தெரிவித்தார்.