பறந்த விமானத்தில் மயங்கி விழுந்த விமானி: அச்சத்தில் உறைந்த பயணிகள்
சுமார் 30,000 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது, விமானி மயக்கமடைந்ததால் பெரும் போராட்டத்திற்குப் பிறகு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பர்மிங்காம் விமான நிலையத்திலிருந்து துருக்கிக்கு பயணித்துள்ளது ஜெட்2 விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக விமானத்தை கிரீஸில் தரையிறக்கும் நிலை ஏற்பட்டதுடன் மருத்துவ அவசரம் எனவும் தகவல் வெளியிடப்பட்டது.
மேலும், சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னரே குறித்த விமானமானது புறப்பட்டு சென்றதாகவும், இது தொடர்பில் புகார் அளித்த பயணிகளுக்கு வெறும் 15 யூரோ கட்டணத்தில் உணவுக்கான சலுகை மட்டுமே அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது விமானி திடீரென மயக்க நிலைக்கு சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து துணை விமானி விமானத்தின் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, கிரீஸில் உள்ள தெசலோனிகி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
மட்டுமின்றி சுமார் ஒருமணி நேரம் ஆம்புலன்ஸ் வருகைக்காக ஓடுதளத்திலேயே விமானம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து மயக்கத்துக்கு உள்ளான விமானிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.