ஒட்டாவாவில் விமான விபத்து
ஒட்டாவாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கிழக்கு ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
விமானத்தினை செலுத்திய விமானியே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டாவா கிழக்கு பகுதியான அலெக்சாண்ட்ரியா என்னும் இடத்தில் இந்த விமான விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த மற்றும் ஒரு நபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செஸ்னா 150 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ மாகாண போலீசாரும், கனடிய போக்குவரத்து பாதுகாப்பு சபையும் தெரிவித்துள்ளன.
என்ன காரணத்தினால் விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிட படவில்லை.