சுவீடன் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் திட்டம்! ஜேர்மனில் இருவர் கைது
சுவீடன் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஐ.எஸ். இயக்க்தின் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானியர்களான இருவரே நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான இருவரும் இப்ராஹிம் எம்.ஜி. ரமின் என். என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள சுவீடன் நாடாளுமன்றத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பொலிஸாரையும் ஏனையோரையும் கொல்வதற்கு இவர்கள் திட்டமிட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புனித குர் ஆன் நூல் எரிக்கப்பட்டமைக்கு பதிலடியாக இத்தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.