இந்தியாவில் நடுவானில் தீப்பிடித்தது விமானம் ; மயிரிழையில் உயிர் தப்பிய 232 பயணிகள்

India Switzerland Flight
By Sahana Apr 26, 2026 09:02 PM GMT
Report

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிச் நோக்கிப் புறப்படவிருந்த சுவிஸ் ஏர் விமானத்தின் எஞ்சின் திடீரெனத் தீப்பிடித்துள்ளது.

விமானியின் துரித நடவடிக்கையால் 232 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். புது டெல்லியிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்பட்ட 'LX147' என்ற சுவிஸ் ஏர் விமானம் ஓடுதளத்தில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானம் தரையிலிருந்து எழும்ப முயன்ற தருணத்தில், அதன் இடது பக்க எஞ்சின் திடீரென செயலிழந்து தீப்பிடித்துள்ளது.

இந்தியாவில் நடுவானில் தீப்பிடித்தது விமானம் ; மயிரிழையில் உயிர் தப்பிய 232 பயணிகள் | Plane Catches Fire In Mid Air In India

விமானத்தின் இடது புறத்தில் கரும்புகை வெளியேறியதுடன், வலது பக்க தரைப்பக்க சக்கரங்களுக்கு அருகிலும் தீ காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தை உணர்ந்த விமானி, உடனடியாகத் தரைக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, விமானத்தை ஓடுதளத்திலேயே அவசரமாக நிறுத்தியுள்ளார்.

விமானத்திற்குள் புகை சூழ்ந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. உடனடியாக அவசரக் கால சறுக்குப்பாதைகள் மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விமானத்தில் 228 பயணிகள் மற்றும் 4 பச்சிளம் குழந்தைகள் இருந்துள்ளனர். அவசரமாக வெளியேறும் முயற்சியில் 06 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தின் 28-வது ஓடுதளம் நீண்ட நேரம் முடக்கப்பட்டது.

இதனால் இந்தியாவின் பரபரப்பான இந்த விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் தாமதமடைந்தன. எனினும், பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து சுவிஸ் ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"இந்தச் சம்பவம் கவலையளிக்கிறது. பயணிகளுக்குத் தேவையான ஹோட்டல் வசதிகள் மற்றும் மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எஞ்சின் தீப்பிடித்ததற்கான தொழில்நுட்பக் காரணங்களைக் கண்டறிய சுவிட்சர்லாந்திலிருந்து நிபுணர் குழுவினர் தில்லிக்கு விரைந்துள்ளனர்.

" விமானி சரியான நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால், நூற்றுக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US