நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் வானூர்தி விபத்து!
நியூயோர்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நேற்று நண்பகல் கடல் வானூர்தி ஒன்று அலைபாயும் கடினமான சூழலில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த நியூயோர்க் தீயணைப்புத் துறை உடனடியாகச் செயல்பட்டு, வானூர்தியில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டது.

அதேவேளை ஈஸ்ட் ஆற்றில் ஒரு மாதத்திற்குள் நடைபெறும் இரண்டாவது கடல் வானூர்தி விபத்து இதுவாகும். மூன்று வாரங்களுக்கு முன்னதாக, குவீன்ஸின் வைட்ஸ்டோன் பகுதிக்கு அருகில் மற்றொரு கடல் வானூர்தி விபத்துக்குள்ளானது.
எனினும், அந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.