நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார்கள் மீது மோதிய விமானம்! 4 பேர் வைத்தியசாலையில்
அமெரிக்க நெடுஞ்சாலையில் கார்கள் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதி இரண்டாக முறிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் கடந்த 11-12-2024 திகதி தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் சாலையில் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுஞ்சாலைக்கு மேல் தாழ்வாக பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென சாலையில் செல்லும் 3 கார்கள் மீது மோதி கீழே விழுந்து இரண்டாக முறிந்ததுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக விக்டோரியா பகுதி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH : Video of the moment when plane crashes into 3 cars on highway in Victoria, Texas
— upuknews (@upuknews1) December 12, 2024
Victoria Police Deputy Chief Eline Moya said four people were taken to hospitals. Three had non-life threatening injuries and one was transported to an out-of-town hospital for higher-level… pic.twitter.com/W6UfUaw3Ga
விபத்து நடந்தபோது விமானி மட்டுமே விமானத்தில் இருந்துள்ளார். விபத்தில் அவர் உயிர் தப்பிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.