கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் ; வெளியான மேலதிக தகவல்
அமெரிக்கா மினியாபோலிஸிலிருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தரையிறங்கும் போது தலைகீழாக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு விமானப் பணியாளர்களும் இருந்தனர். இதில் 10 பேர் மட்டும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்
இதன்போது விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
மீட்புப் பணியாளர்கள் மற்றும் காயமடையாத பயணிகள் உள்ளிருந்தவர்களின் வெளியேற்றும் காணொளிகளும் வெளிவந்துள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானபோது கரும்புகை வானை நோக்கி எழுந்தது. உள்வரும் விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
பல மாற்று விமானங்களைப் பெறுவதற்குத் தயாராகி வருவதாக மாண்ட்ரீல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
பின்னர் மாலை 5 மணி நிலவரப்படி புறப்பாடு மற்றும் வருகை மீண்டும் தொடங்கியதாகவும், விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
அதேசமயம் விபத்து நடந்த நேரத்தில் மணிக்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது