உக்ரைன் - ரஷ்யப் போர் தொடர்பில் சவூதி அரேபியாவில் 4 மணிநேர பேச்சுவார்த்தை!
யுக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகளுக்கு இடையில் சவூதி அரேபியாவில் இன்று சுமார் 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேர்மறையான, ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்ததாக ரஷ்ய பிரதிநிதியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்படாமையினால் யுக்ரைனின் பிரதிநிதிகள் எவரும் அதில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய பேச்சுவார்த்தைகள் ரஷ்யா,போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளதா என்பதை ஆராய்வதற்கான முதல் படி என அமெரிக்கா கூறுகிறது.
அதேநேரம் இதனூடாக அமெரிக்காவுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு முடியும் என நம்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேவேளை, தாம் பங்குபற்றாத பேச்சுவார்த்தைகளிலிருந்து எடுக்கப்படும் எந்தவித தீர்மானங்களையும் அங்கீகரிக்க முடியாது என யுக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதனிடையே தேவை ஏற்படின் யுக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.