தீப்பிடித்து சிதறிய விமானம்: வெளியே குதித்து உயிர் தப்பிய விமானிகள்
அமெரிக்காவின் டெக்சாஸில் தீப்பிடித்து சிதறிய விமானத்தில் இருந்த 2 விமானிகள் வெளியே குதித்து காயத்துடன் தப்பினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லேக் ஒர்த் நகரில் ராணுவ விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில், 2 விமானிகள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், விமானம் நடு வழியில் திடீரென தீப்பிடித்து வெடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் அவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் விழுந்தபோது, கீழே 3 வீடுகள் இருந்துள்ளன.
எனினும், யாரும் இதில் சிக்கவில்லை. குடியிருப்புவாசிகளுக்கும் காயம் ஏற்படவில்லை. விமானிகளில் ஒருவர் தரையில் கிடந்து உள்ளார். மற்றொருவர் ஒயர்களுக்கு இடையே சிக்கி இருந்துள்ளார். காயமடைந்த விமானிகள் இரண்டு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.