இந்திய பிரதமர் மோடி ட்ரம்புடன் பேசவில்லை வர்த்தக ஒப்பந்தம் இல்லை
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏன் இறுதி செய்யப்படவில்லை என்பது குறித்து அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் ஒரு பரபரப்பான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதி ஒப்புதலுக்காக பிரதமர் மோடி ஜனாதிபதி ட்ரம்பிற்கு மூன்று வார காலத்திற்குள் அழைப்பு விடுக்க வேண்டும் என அமெரிக்கா தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்திய தரப்பில் நிலவிய சில தயக்கங்கள் காரணமாக மோடி அந்த அழைப்பை விடுக்கவில்லை. இதற்கிடையில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதால், இந்தியாவுக்கான சலுகை விகிதங்கள் மாறின.
பின்னர் இந்தியா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறியபோது, "ரயில் ஏற்கனவே நிலையத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டது" என்று அமெரிக்கா கைவிரித்துவிட்டது.
இதனால் தற்போது இந்திய தயாரிப்புகள் மீது 50% வரை அதிக வரி விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.