எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரும் கனடிய எதிர்க்கட்சி
எல்லைப் பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் கோரியுள்ளார்.
கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.
ஆயுத படையினரையும் உலங்கு வானூர்திகளையும் ஈடுபடுத்த வேண்டுமென கோரியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எல்லைப் பாதகாப்பு கரிசனைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்
எல்லைப் பாதுகாப்புப் படையினர், எல்லைக் கடவைகளில் மட்டும் கடமையில் ஈடுபடுத்தாது ஒட்டு மொத்த எல்லைப் பகுதிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு பணிகளின் போது நவீன கருவிகளை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.