எதிரிகள் நினைத்து பார்க்க முடியாத வகையில் முடிவு இருக்க வேண்டும்: ஈரான் தரப்பில் வெளியான தகவல்
எதிரிகள் நினைத்து பார்க்க முடியாத வகையில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரான் மீது தாக்குதல் நடத்தவும், ஈரானியர்களை கொல்லவும் அமெரிக்க படைகளுக்கு அண்டை நாடுகள் ஊக்குவிக்கின்றன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுப்படைகள் தாக்குதலில் 200 குழந்தைகள் உட்பட ஆயிரகணக்க்கான அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். நாங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்று கூறுவதற்கு காரணம், நாங்கள் போரை விரும்புகிறோம் என்பது அல்ல.
மாறாக, எதிரிகள் மீண்டும் ஒரு போதும் இத்தகைய தாக்குதல்களை திரும்பச் செய்ய நினைத்துக் கூட பார்க்காத வகையில் முடிவாக இருக்க வேண்டும் என்பதே காரணம் ஆகும்.
ஏற்கனவே எதிரிகள் இதற்கான பாடத்தை கற்று வருகின்றனர். எந்த மாதிரியான நாட்டை கையாண்டு வருகிறோம் என்பதை புரிந்திருப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.