உக்ரைன் போர் நடந்தால் போலந்து இதற்கு தயாராக இருக்கும் - பிரசிடாக்ஸ்
உக்ரைனில் நிலைமை மோசமடையாது என்று தான் நம்புவதாக போலந்து துணை வெளியுறவு அமைச்சர் பிரசிடாக்ஸ் கூறினார்.
ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் தீவிரம் அடைந்து வருவதனை தொடர்ந்து எல்லையில் இரு ராணுவ வீரர்களும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது படையெடுக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளன. தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் போர் மூண்டால் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறுவார்கள். எல்லையில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடான போலந்து அத்தகைய அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது.
அதற்கான மாற்றங்களைச் செய்கிறது. உக்ரேனிய குடிமக்கள் பெரிய அளவில் நாடுகடத்தப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்களைத் தணிக்க இராஜதந்திர முயற்சிகளைத் தொடரப்போவதாக போலந்து கூறியுள்ளது, மற்ற நாடுகள் உக்ரைனில் தங்கள் தூதரகப் பணிகளைக் குறைக்கின்றன.
இதற்கிடையில், உக்ரைனில் நிலைமை மோசமடையாது என்று தான் நம்புவதாக போலந்து துணை வெளியுறவு அமைச்சர் பிரசிடாக்ஸ் கூறினார். உள்துறை அமைச்சகம் சில வாரங்களில் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை தயார் செய்து வருகிறது என்றார்.