ஒண்டாரியோவின் ஒட்டாவா ஆற்றில் மர்ம சடலம் மீட்பு
ஒண்டாரியோ மாகாணக் காவல்துறையினர் (Ontario Provincial Police) தற்போது ஒரு மர்ம மரணம் தொடர்பான விசாரணை அரம்பித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில், கிளாரன்ஸ்-ராக்லாண்ட் (Clarence-Rockland) சமுதாயத்தின் அருகே உள்ள ஒட்டாவா ஆற்றில் ஒரு நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சனிக்கிழமை மாலை சுமார் 5:30 மணியளவில், டெல்லேர் வீதி (Dellaire Street) பகுதிக்கு அண்மையிலுள்ள ஆற்றுக்கரை பகுதியில் ஒரு சடலம் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"சமூகத்திற்கு எந்தவொரு உடனடி பாதுகாப்பு அபாயமும் இல்லை," என காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த நபர் யார் என்பதை இதுவரை காவல்துயறயினர் அடையாளம் காணவில்லை.
"விசாரணை முன்னேறியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் போலீசார் அதிகமாக காணப்படலாம்," என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை தற்போது அந்த நபரின் அடையாளத்தைத் தெரிந்துகொள்வதற்காக விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.