பிரிட்டன் விமான நிலையத்தில் இளைஞர்களை காலால் தாக்கும் பொலிஸார்; வெளியான அதிர்ச்சித் தகவல்
பிரிட்டனின் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸ்உத்தியோகத்தர்கள் பாக்கிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்குவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகிவரும் வீடியோவில் பொலிஸ் உத்தியோகத்தர்ஒருவர் நபர் ஒருவரின் தலையில் காலால் மிதிக்கின்றார்.
சமூகவலைத்தளங்களில் வெளியான காணொளி
தரையில் நபர் ஒருவர் காணப்படுவதையும் இரு பொலிஸார் அவரை நோக்கி டேசரை நீட்டுவதையும் காண்பிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
pic.twitter.com/xfCmd0kE6G
— Visegrád 24 (@visegrad24) July 24, 2024
A video of a police officer kicking a man at Manchester Airport is going viral in the UK.
3 policemen were “punched to the ground” in a “violent assault” when they attempted to arrest a suspect.
“As the attending officers were firearms officers, there…
இதன் பின்னர்ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நபர் ஒருவரின் முகத்தில் காலால் மிதித்து அந்த நபரின் தலையில் மிதிக்கின்றார்.
அதேவீடியோவில் நபர் ஒருவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தரையில் வீழ்த்துவதையும் கைகளை பின்பக்கமாக இழுத்து வைத்திருப்பதையும் ஒருவர் அந்த நபரை காலால் உதைப்பதையும் காணமுடிகின்றது.
இந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து பிரிட்டனில் பொலிஸார் குறித்து சர்ச்சையும் மூண்டுள்ளது. அதேவேளை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றன பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து வீடியோவில் காணப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னணி பணிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த தாக்குதலிற்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் பொலிசின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியான டல் பாபு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.