2 வயது சிறுமி மரணம் தொடர்பாக இரண்டு பேர் கைது
ஓன்ராறியோ மாகாணத்தில் கிரேவன்ஹர்ஸ்ட் பகுதியில் இரண்டு வயது குழந்தையின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்களை, ப்ரேஸ்பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2023 ஜனவரி 5 ஆம் திகதி இரவு 8 மணிக்கு முன்பாக, ப்ரவுன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கடுமையான காயங்களுடன் சிறுவனைப் பற்றிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓன்டாரியோ மாகாண காவல்துறையும் அவசர சேவை குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
காயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், இரு நாட்களின் பின்னர் உயிரிழந்தது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை 24 வயதான பிராம்டன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அடுத்த நாளில், கிரேவன்ஹர்ஸ்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தகவல்களை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் வெளியிட்ட பதிப்புத் தடையினால், மேலும் எந்தவொரு தகவலும் பொது மக்களுக்கு வெளியிட முடியாது என ஒன்றாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒன்றாரியோ குற்றப் பலனாய்வுப் பிரிவு, துப்பறியும் பிரிவு உள்ளிட்ட பல்வேறு குழுக்க்கள் கூட்டாக இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.