கனடாவில் காணாமல் போன நபரைத் தேடும் காவல்துறை!
கனடாவில் உள்ள அலிஸ்டன் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைப் பற்றிய தகவல் அறிந்தால் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு நொட்டவாசாகா ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.
30 வயதான கோரி சிமான்ஸ்கி என்ற நபர், கடைசியாக ஜூலை 14 அன்று மாலை சுமார் 6:00 மணியளவில், அலிஸ்டனில் உள்ள விக்டோரியா வீதியில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர், வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் எனவும் சுமார் 6 அடி உயரம், 230 பவுண்ட் (104 கிலோ) எடை கொண்டவர் எனவும், நடுத்தர உடல்வாகு, தோள்பட்டை வரை நீண்ட பொன்னிற தலைமுடி மற்றும் நீல நிற கண்களைக் கொண்டவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோரியின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
அப்பகுதியில் வசிப்பவராக இருந்தால், உங்கள் வீட்டு சிசிடிவி காட்சிகளை பார்த்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் பகிருமாறு கோரப்பட்டுள்ளது.
கோரி சிமான்ஸ்கி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக 1-888-310-1122 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.