இலங்கை வாகன விபத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழப்பு
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காரில் பயணித்த அக்போபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான முத்தியன்சலாகே குணதிலக்க பண்டார யாகம்பத் வயது 48 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த வாகனமும், கந்தளாய் பகுதியில் இருந்து கபரணை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்போபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுமுறையில் வீடு திரும்பிய போது விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.