கனடாவில் பொலிஸாரை தாக்கி தப்பியோடிய பெண் கைது
கனடாவில் பொலிஸாரை தாக்கி தப்பியோட முயற்சித்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒஷாவா நகரத்தில் கைது முயற்சியின்போது ஒரு பெண் போலீசாரை தாக்கித் தப்பியோடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
22 ஸ்டீவன்சன் சாலையில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில், வாகன மோசடி வழக்கில் சந்தேகநபராக இருந்த பெண்ணை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த 24 வயது பெண் பிணை விதிகளை மீறியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணை கைது செய்ய முயன்றபோது, குறித்த பெண், ஓர் அடையாளம் தெரியாத ஓட்டுநருடனும், வெள்ளை நிற மெர்சிடீஸ் வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
அந்த சாரதி வாகனத்தை பின்னோக்கி ஓட்டியதால், போலீசரை பல மீட்டர்கள் இழுத்துச் சென்றதுடன், அருகில் நிறுத்தியிருந்த வாகனமொன்றுடன் மோதி விட்டு அந்த இடத்தை விட்டு தப்பியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதனால், அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. முதலில், சந்தேகநபர் 31 வயது பெண் என அடையாளம் காணப்பட்டிருந்தாலும், பின்னர் அவள் போலியான பெயரைப் பயன்படுத்தி நீதிமன்றத்தையும், விசாரணையாளர்களையும் ஏமாற்றியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவள் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் பீல் பிராந்தியத்தில் இன்னொரு வாகனத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டபோது உண்மையான அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பெண் 24 வயதான அஸ்மா ஒஅத்ரியா என அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.