ஒன்றாரியோவில் 20,0000 டொலர் மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள கிரேட்டர் சுட்புரியில் நெடுஞ்சாலை 69-இல் காவல்துறையினர் நடத்திய அதிதீவிர வாகன சோதனையின் போது, 200,000 டாலர் மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாகத் தெற்கு ஒன்ராறியோவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமையில் பல காவல் பிரிவுகள் இணைந்து நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் அக்டோபர் 27 அன்று காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய நபர் மற்றும் அவரது வாகனத்தைச் சோதனை செய்தபோது காவல்துறையினர் பின்வருவனவற்றைக் கைப்பற்றினர்.
2 கிலோகிராம் (2,000 கிராம்) எடை கொண்ட இரண்டு கொக்கைன் கட்டிகள், 2 ஹைட்ரோமார்ஃபோன் மாத்திரைகள், 1 கைபேசி, 2,925 டொலா் ரொக்கப் பணம். காவல்துறையின் கூற்றுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு தோராயமாக 200,000 டொலருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞர் மீது போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் உடைமை மற்றும் 5,000-க்கு உட்பட்ட குற்றவியல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அக்டோபர் 23 அன்று பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஒன்ராறியோ மாகாணக் காவல்துறையின் தலைமையிலான 'மாகாண துப்பாக்கிகள் மற்றும் சட்டவிரோத கும்பல் தடுப்புப் பிரிவு'டன் இணைந்து இந்த விசாரணையைச் சுட்புரி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
கிரேட்டர் சுட்புரி பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக கிரேட்டர் சுட்புரி காவல்துறையை (705-675-9171) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.