டொராண்டோ பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர் !
டொராண்டோ பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர் ! டொராண்டோ நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரபல பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரெம்னர் பூலேவார்ட் மற்றும் லோயர் சிம்கோ தெரு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள 'ரவுண்ட்ஹவுஸ் பூங்காவில்' இச்சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள ரயில் பெட்டிகள் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் அந்த நபரைத் தட்டிக் கேட்டபோது, அவர் மீண்டும் அக்குழந்தையிடம் தகாத முறையில் நடந்துள்ளார் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
புதன்கிழமை இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சந்தேக நபரின் அடையாளங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
55 முதல் 60 வரை வயதுடைய, 5 அடி 6 அங்குலம் உயரமுடைய, நடுத்தர உடல்வாகு, முன் தலைமுடி குறைந்த நரைத்த முடி, தாடி-மீசை இல்லாத முகம், வெள்ளி நிற உலோகம் கொண்ட கண்ணாடி அணிந்திருந்தார் என குறித்த நபர் பற்றிய விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்தவர்கள் அல்லது சந்தேக நபரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.