கனடாவில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை தேடும் பொலிஸார்
கனடாவின், மிஸ்ஸிசாகாவில் கடத்தல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மர்லன் டவுனி என்பவருக்கு பீல் பொலிசார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் Blackwood Mews மற்றும் Golden Locust Drive பகுதியில் கடந்த பெப்ரவரி 22 அன்று நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 27 வயது ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தற்றதாகக் கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 49 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யபட்டுள்ளதுடன், 15 முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் நபர் மிகவும் ஆபத்தான நபர் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.