கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்தவரை தேடும் பொலிஸார்
கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறித்த நபர் பெண்களை காதலிப்பதாக பாசாங்கு செய்து அவர்களிடமிருந்து பெரும் தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களை பயன்படுத்தி இந்த மோசடிகள் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சுமார் 275,000 டாலர்களை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் குறித்த வழக்கு விசாரணைகள் கடந்த வாரம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே குறித்த நபரை தேடி போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் நட்பாக பழகி கடனாக பணம் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா, சஸ்கெட்ச்வான், ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் இந்த நபர் மோசடிகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
30 வயதான சுக்குவா வில்லியம்ஸ் என்ற நபரை இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபருக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.