பாடசாலைக்குள் துப்பாக்கியுடன் வந்த மாணவனை சுட்டுகொன்ற பொலிஸார்! பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் நடுநிலை பாடசாலை ஒன்றிற்குள் துப்பாக்கியுடன் வந்த மாணவனை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த பாடசாலைக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான்.
இது தொடர்பில் தகவலறிந்ததும் உடனடியாக செயல்பட்ட பொலிஸார் அந்த மாணவன் பாடசாலைக்குள் நுழைவதற்குள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் மாணவன் உயிரிழந்துள்ளனர்.
இதனை தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த அச்சுறுத்தலான சம்பவத்தின்போது, வேறு மாணவர்களோ அல்லது காவல் அதிகாரிகளோ காயமடையவில்லை என விஸ்கான்சின் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ஜோஷ் கவுல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கூறினார்.