ரொறன்ரோ பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவின் ரொறன்ரோ பொலிஸார், நகரில் களவுத் தொல்லை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரொறன்ரோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சில நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கள்வர் தொல்லை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாக்கெட் முறையிலான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் பொழுதுபோக்கு மாவட்டத்தில் இந்த கொள்ளை சம்பவங்களுக்கான சாத்தியங்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ சர்வதேச திரைப்பட விழா, இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளின் போது இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்ற போது இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றதனை பொலிஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
முக்கிய நிகழ்வுகளின் போது இவ்வாறான திருட்டு சம்பவங்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் திரளாக கூடும் இடங்களில் இவ்வாறு திருட்டு சம்பவங்கள் இடம்பெற சாத்தியம் அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.