டொரொன்டோ மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
டொரொன்டோ நகர மையப் பகுதியில் (downtown core) பண்டிகைக் கால ஷாப்பிங் மற்றும் நிகழ்ச்சிகளின்போது திருட்டுகளும் வாகனங்களிலிருந்து பொருள் திருட்டுகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
டொரொன்டோ பொலிஸார் இது குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளனர். ஷாப்பிங் சென்டர்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் வரும் மக்களையும், வாகனங்களையும் குறிவைத்து திருடர்கள் செயல்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
“பைகளை கவனிக்காமல் விட்டவர்களிடமிருந்தும், வாகனங்களில் தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள், பார்சல்கள், மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் செல்கின்றனர்” என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஷாப்பிங் அல்லது நிகழ்ச்சிகளின் போது செல்போன், பணப்பை, பார்சல்களை வாகனத்தில் விட்டுவிட்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனத்தை விட்டு இறங்கும்போது எல்லா கதவுகளும் ஜன்னல்களும் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணப்பை அல்லது போனை பின்பக்க பாக்கெட்டில் வைக்க வேண்டாம் எனவும்,ஜிப் செய்யப்பட்ட பைகள், கிராஸ்-பாடி ஸ்ட்ராப் பைகள், உள்ளே இருக்கும் பாக்கெட்டுகளைப் பயன்படுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் திருடர்கள் மிகத் தீவிரமாக இயங்குகின்றனர். ஒரு கணம் கவனக்குறைவு போதும், உங்கள் மதிப்புள்ள பொருட்கள் பறிபோகலாம்” என்று டொரொன்டோ பொலிஸார் எச்சரித்துள்ளனர்.