கனடா எல்லையில் 100 கிலோ கொகேய்ன் பறிமுதல்
ஒன்டாரியோ மாகாணத்தின் சார்னியாவில் அமைந்துள்ள புளுவோட்டர் பிரிட்ஸ் எல்லைச் சோதனை நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது, 100 கிலோ கிராமிற்கும் அதிகமான கோகெய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு நுழைந்த ஒரு வர்த்தக லாரி, எல்லை பாதுகாப்பு சேவை அதிகாரியால் இரண்டாம் நிலை சோதனைக்காக அனுப்பப்பட்டது.
லாரியின் ட்ரெய்லரை ஆய்வு செய்த போது, 111.4 கிலோ சந்தேகத்திற்கிடமான கோகெய்ன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நோவா ஸ்கோஷியாவின் டார்த்மவுத் பகுதியைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவரையும், ஒன்டாரியோவின் பெல்வில் பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இருவருக்கும் “கோகெய்ன் இறக்குமதி செய்தல்” மற்றும் “விற்பனை நோக்கில் கோகெய்ன் வைத்திருத்தல்” என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல், தெற்கு ஒன்டாரியோ பிராந்தியத்தில் மட்டும் அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 1,743 கிலோ கோகெய்ன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.