டிக் டாக்கில் டொனால்ட் டிரம்ப் பற்றி அரசியல் விமர்சகர்களின் கருத்து
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சியின் தலைவரான இவர், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Tik Tok-ல் புதிய கணக்கு
இந்நிலையில், கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததற்காக அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது. இந்நிலையில், டிரம்ப் சீன செயலியான Tik Tok-ல் புதிய கணக்கை தொடங்கினார்.
டிக் டாக்கில் அவருக்கு 30 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி டிக் டாக் செயலியை தடை செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது அவர் டிக் டாக்கில் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசார வியூகத்திற்காக அவர் டிக் டாக்கில் இணைகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.