கனடாவின் அரசியல் தலைவரது மனைவிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான கன்சர் கட்சியின் தலைவர் பியரே பாலிவியரின் (Pierre Poilievre) மனைவி அனைடா பாலிவியருக்கு ( Anaida Poilievre) பாலியல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கணையடிய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வலது சாரி அரசியல் விமர்சகர் ஜெரோம் மெக்கன்சி என்பவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இணையம் வழியாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இணைய வழியில் நேரலையில் இணைந்து கொண்ட மெக்கன்சி அனைதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரது பூர்வீகம் தொடர்பிலும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார் எனவும் இன ரீதியாக தூற்றுதலை மேற்கொண்டு உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பியரே பலிவியோ அண்மையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இவற்றை வன்மையாக கண்டிப்பதாகவும் அனைதாவின் கணவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான பியரே பாலிவியோ தெரிவித்துள்ளார் .
கனடாவில் எவரும் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உட்படுவதனை ஏற்க முடியாது என ndp கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார