கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். “இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்.
சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துக்கள்
அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது,” என்று ஃபாரெல் அறிவிப்பில் கூறினார்.
போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
அதேவேளை நேற்றையதினம் உலகெங்கும் வாழும் கிருஸ்தவர்களால் ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் எதிர்பாராத விதமாக பொதுவில் தோன்றி, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 35,000 க்கும் மேற்பட்ட கூட்டத்தினரை தனது போப் மொபைலில் இருந்து வரவேற்றார்,
இது கடுமையான இரட்டை நிமோனியாவிலிருந்து மீண்டதிலிருந்து அவரது மிக முக்கியமான பயணத்தைக் குறித்தது. "சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துக்கள் என " 88 வயதான போப், செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் லோகியா பால்கனியில் இருந்து அறிவித்தார்.
வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். உலக அமைதியை வலியறுத்திய போப் தனது உரையில்,
"காசாவின் நிலைமை பரிதாபகரமானது. பசியால் வாடும் மக்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் துன்பப்படும் மக்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக கூறினார்.
காசா எல்லையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என முறையிடுவதாகவும், பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் போப் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.