உக்ரைன் மீது ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதல்; நேரில் சென்ற போப் பிரான்ஸிஸ்!
கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ், போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. மக்கள் பதுங்கு குழிகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்ப்பலி நிகழ்ந்திருக்கிறது.
இந்நிலையில் உலக நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ், போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று வாட்டிகனில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு நேரில் சென்ற போப் பிரான்ஸிஸ், “ உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது குறித்து தனது கவலையை தெரிவித்தார்.
மேலும், இவ்விவகாரத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உக்ரேனிய கத்தோலிக்க தலைவர்களுக்கு உறுதி அளித்தார்.
போப் பிரான்ஸிஸ் நேரடியாக ஒருநாட்டின் தூதரகத்திற்கே செல்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.