பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்சனின் மனைவி காலமானார்
அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான லிசா மேரி பிரெஸ்லி தனது 54 ஆவது வயதில் வியாழக்கிழமை (12) காலமானார்.
லிசா மேரி பிரெஸ்லி , ரோக் அன்ட் ரோல் மன்னன் எனப் புகழப்பட்ட பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளாவார்.
அத்துடன் பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்சனின் முதல் மனைவியும் இவர் ஆவார்.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மாரடைப்புக்கான வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
லிசா மேரியின் திடிர் மறைவினால் அவரின் தாயார் பிரிசிலியா பிரெஸ்லி மற்றும் பிரெஸ்லி குடும்பத்தினர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
1994 ஆம் ஆண்டு பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜோன்சனை லிசா மேரி பிரெஸ்லி திருமணம் செய்தார். அது மைக்கல் ஜக்சனின் முதல் திருமணம் என்பதுடன் லிசா மேரி பிரெஸ்லியின் 2 ஆவது திருமணமம் ஆகும் .
எனினும் இவர்கள் 1996 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரித்தமை குறிப்பிடத்தக்கது.