கனடா அஞ்சல் நிறுவனத்திற்கு எதிராக தொழிற்சங்கம் முறைப்பாடு
கனடாவின் அஞ்சல் பணியாளர்கள் சங்கமான Canadian Union of Postal Workers (CUPW), கனடா அஞ்சல் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது.
நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகள் (unfair labour practices) தொடர்பாக கனடிய கைத்தொழில் உறவுகள் சபைக்கு Canada Industrial Relations Board (CIRB) அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.
தனது தனிப்பட்ட பேச்சுவார்த்தை உரிமையை மீறி, அஞ்சல் நிறுவனம் நேரடியாக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என தொழிற்சங்கம் கூறியுள்ளது.
இது, தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரான நடைமுறை என தெரிவித்துள்ளது.
கூட்டங்கள், வீடியோக்கள், செய்தி வெளியீடுகள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஊழியர்களிடம் நேரடியாக விளம்பரத்துடன் நெருக்கமாக கொண்டு செல்வது போன்ற முறைகள் மூலம் தொழிற்சங்கத்தை புறக்கணிக்க முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனுடன், அஞ்சல் நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் பீதியூட்டும் வகையிலும் தவறான தகவல்களாகவும் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.