மீண்டும் பாரிய அளவில் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்! மக்களை தயாராகுமாறு மின்சக்தி அமைச்சர் அறிவிப்பு
அடுத்த வருடம் முதல் 6 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆறு மணித்தியால மின்வெட்டு
மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்காவிட்டால் இவ்வாறு அடுத்த வருடம் நாளாந்தம் 6 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இதற்கு தயாராக வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய அமைய மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அமைச்சர் கஞ்சன மேலும் குறிப்பிட்டார்.