டொராண்டோவில் பலத்த காற்று குறித்து எதிர்வுகூறல்
கனடாவின் டொராண்டோ நகரத்திற்கு திங்கட்கிழமை பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் உள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பலத்த காற்று காரணமாக மின்சார விநியோகம் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்து சேவைகளிலும் கடும் இடையூறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை நகரை கடக்கும் குளிர் முனை காரணமாக தென்-மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் எனவும் பிற்பகலில் இந்த காற்று வட-மேற்கு திசையாக மாறும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உறைபனி மழையால் அதிக அளவில் பனிக்கட்டிகள் சேர்ந்துள்ள பகுதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. மின்சார விநியோக தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சேவைகள் மற்றும் பயணங்களில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் உருவாகலாம்,” என கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கட்டிடங்களுக்கும் மரங்களுக்கும் பெரும் சேதம் ஏற்படும் சாத்தியம் உள்ளது” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.