தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் நேற்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கமான்று பதிவாகியுள்ளது.
இது ரிச்சர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்மரால்டாஸ் (Esmeraldas) நகரத்திலிருந்து 20.9 கிலோமீற்றர் வடகிழக்கே, பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் 20 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடங்கள் சிலவும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, பசிபிக் கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் குறித்த எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.