புதிய பாதுகாப்பு படைகளை உருவாக்க திட்டமிட்ட பெலாரஸ் அதிபர்!
பெலாரஸில் புதிய பாதுகாப்பு படைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டனர் லூகாசென்கோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அவர் நாட்டின் பாதுகாப்பை நிரப்புவதற்கு துணை இராணுவ பிரிவுகளை உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.
ஒவ்வொரு பெலாரஸ்ய பிரஜைகளும், தேவையேற்பட்டால் தனது குடும்பத்தையும் வீட்டையும் பாதுகாக்க ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதன்படி ஏறக்குறைய 150,000 தன்னார்வலர்களைக் கொண்ட படை உருவாக்கப்படும் எனவும் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் லுகாஷென்கோ ரஷ்யாவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை வளர்த்துள்ளார்.
மாஸ்கோ பெலாரஸில் சுமார் 10,000 துருப்புக்களை பராமரித்து வருகிறது. இரு நாடுகளும் தங்கள் இராணுவ கூட்டணியின் ஒரு பகுதியாக தொடர்ந்து கூட்டு பயிற்சிகளையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.