அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கடந்த மார்ச் மாதம் ஜோ பைடனுக்கு தீவிர புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதுடன் எலும்புகள் வரை புற்றுநோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
82 வயதான முன்னாள் ஜனாதிபதி நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.
ஆனால் அவருக்கு வயது அதிகம் என ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க அவரது சொந்த கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.
அவருக்கு பதில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.