பிரிட்டன் ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய ஜனாதிபதி
பிரிட்டன் ராணியின் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். அவரது உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11 ஆம் திகதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டு, அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்குபல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். எடின்பெர்க் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டனை சென்றடைந்தது.
எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 17ம் திகதி லண்டன் செல்லும் ஜனாதிபதி முர்மு, 19 ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருப்பார் என கூறப்படுகின்றது