உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளி நபர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய்பால் சிங் பங்கா (Ajay Banga) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019ஆம் ஆண்டு பதவியேற்ற 66வயதான டேவிட் மால்பாஸ், பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது. எனினும் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) ஆலோனை நடத்தினார்.
அதில், சர்வதேச நிதி நிறுவனமான 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய்பால் சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.
உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தே கடந்த மார்ச் 29 முடிவடைந்து விட்டது. இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய்பால் சிங் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அஜய்பால் சிங் பங்கா 5 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.