மேற்கத்திய மக்களுக்கு அதிபர் புடின் வெளியிட்ட தகவல்!
மேற்கத்திய நாடுகளின் சாதாரண குடிமக்கள் சம்பள உயர்வுக்காக போராட வேண்டும் என்றும் ரஷ்யா தங்களுக்கு எதிரி என்று நம்ப வேண்டாம் என்றும் அதிபர் புடின்(Vladimir Putin) கூறினார்.
ஒரு மேற்கத்திய நாட்டின் சாதாரண குடிமகனுக்கு என்ன சொல்வீர்கள் என்று கேட்டபோது, அதிக ஊதியத்திற்காக போராடுங்கள்,ரஷ்யா உங்கள் எதிரி என்று நம்பாதீர்கள் என்று அதிபர் புடின்(Vladimir Putin) கூறியுள்ளார்.
ரஷ்யா, மேற்கத்திய நாடுகளின் எதிரி அல்ல என்றும், ஐரோப்பா அல்லது அமெரிக்காவை நோக்கி ஒருபோதும் தீங்கிழைக்கும் நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் புடின் (Vladimir Putin) கூறினார்.
ஆனால் மேற்கத்திய தலைவர்கள், பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு வழிவகுத்த கடுமையான தவறுகளை செய்ததாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.