கனேடிய மாகாணங்கள் சுதந்திரம் பெறுவது தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள செய்தி
Alberta, Saskatchewan premiers shut down Elon Musk’s call for separation: ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் மாகாணங்கள் பிரிவது தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள செய்திக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிடமிருந்து பிரிந்து தனிநாடாவது தொடர்பில் வாக்கெடுப்புகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதே கொள்கைகளைக் கொண்ட கட்சி ஒன்று கியூபெக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த விடயம் கனடாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், அந்த விடயத்தில் மூக்கை நுழைந்து கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்.
ஆம், சமூக ஊடகமான எக்ஸில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கியூபெக் பிரியவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
@Polymarket They would be better off. Alberta and Saskatchewan should separate too.
— Elon Musk (@elonmusk) October 7, 2026
அத்துடன், கியூபெக் பிரிந்தால், அம்மாகாணம் நன்றாக இருக்கும் என்றும், ஆல்பர்ட்டாவும் சஸ்காட்செவனும் கூட பிரியவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்.
இந்நிலையில், சஸ்காட்செவன் பிரீமியரான ஸ்காட் மோ (Scott Moe), எலான் மஸ்கின் செய்திக்கு, ’No' என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
அதேபோல, ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித்தும், தான் எலான் மஸ்கின் கருத்து தனக்கு உடன்படவில்லை என்று கூறியுள்ளார்.
எலான் மஸ்கின் தாய் சஸ்காட்செவனில்தான் பிறந்தார், எலான் மஸ்க் ஒன்ராறியோவில்தான் முதல் தன் மனைவியை சந்தித்தார், அவர் ஒரு கனேடிய குடிமகனும்கூட என்பது குறிப்பிடத்தக்கது.