இலங்கை எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயற்படவில்லை
இலங்கை எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயற்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் ஈரான் கப்பல் தாக்குதல் விவகாரத்தை கையாண்டதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிப்புறச் சக்திகளினால் இடம்பெறக்கூடிய சில விடங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்ற போதிலும் இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் அனைத்து விடயங்களிலும் குறை காண்பதாகவும், பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரான் கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் நடுநிலைக் கொள்கையை பின்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மனிதாமானத்தை முன்னிலைப்படுத்தி குறிப்பாக மனித உயிர்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.