சஜித்திற்கு பதில் கடிதம் எழுதிய கோட்டாபய ராஜபக்ஷ
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றை ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.
சஜித் பிரேமதாச, பிரதமர் பதவியை ஏற்று புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். புதிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தான் முதலில் அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாச அதற்குத் தயாராக இல்லை என்றும் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமரின் கோரிக்கையை நிராகரிக்கும் பட்சத்தில் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வாக நாட்டின் பிரதமராக பல தடவைகள் பதவி வகித்த சிரேஷ்ட அரசியல்வாதி ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.