அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி
அமெரிக்காவின் நியூ ஹம்ஷயர் மாகாணம் நஷ்வா நகரின் ஸ்கை மைவ்டவ் கவுண்டி நகர் பகுதியில் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் துப்பாக்கி சூட்டில்59 வயது நபர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 2 பேர் படுகாயமடைந்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த கேளிக்கை விடுதியில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், அந்த கேளிக்கை விடுதிக்கு துப்பாக்கியுடன் ஒரு நபர் நுழைந்தார்.
அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோட முயன்ற ஹண்டர் என்ற 23 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.